திருமணப்பரிசை திறந்து பார்க்க 9 ஆண்டுகள் காத்திருந்த தம்பதி: காரணம் என்ன?

259

 

அமெரிக்காவில் தம்பதி ஒன்று தங்களுக்கு கிடைத்த திருமணப் பரிசை திறந்து பார்க்க 9 ஆண்டுகள் வரை காத்திருந்த சுவார்ஸிய சம்பவம் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் குடியிருந்து வருபவர்கள் கேத்தி மற்றும் பிராண்டன் ஆகியோர். இவர்களது திருமணம் கடந்த 2007 ஆம் ஆண்டு உற்றார் உறவினர்கள் புடைசூழ விமரிசையாக நடந்துள்ளது.

புதுமண தம்பதிகளுக்கு அவர்களது நெருங்கிய உறவினர் ஒருவர் திருமணப் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

பரிசை வழங்கிய அந்த உறவினர் இவர்களுக்கு ஒரு அன்பு கட்டளை கூட வழங்கியுள்ளார். அது என்னவெனில், தம்பதிகள் இருவரும் தங்களது வாழ்க்கையில் முதன் முறையாக எப்போது கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து செல்லலால் என முடிவுக்கு வர நேருகிறதோ அப்போது இந்த பரிசை திறந்து பார்க்க வேண்டும் என்பதே அந்த அன்பு கட்டளை.

நீண்ட 9 ஆண்டுகளில் பல முறை இருவரும் சண்டையிட்டு பின்னர் ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இதனிடையே தங்களது திருமண நாள் நெருங்கி வரும் நிலையில் புதிதாய் என்ன பரிசு வாங்கலாம் என யோசனை செய்த போது, கேத்தி தமது உறவினர் வழங்கிய பரிசு பொருள் இன்னமும் திறக்கப்படாமல் இருப்பது குறித்து ஞாபகப்படுத்தியிருக்கிறார்.

உடன் இருவரும் குறிப்பிட்ட அந்த பரிசு பொருளை எடுத்து பிரித்து பார்த்துள்ளனர். தங்களது திருமண பந்தத்தை மேலும் உறுதியாக்கும் சூத்திரம் எதுவும் அதில் இருக்கலாம் என கருதியவர்களுக்கு, அதில் இரண்டு மது கோப்பையும் சிறிதளவு பணமும் இருக்க கண்டனர்.

மட்டுமின்றி கேத்தி மற்றும் பிராண்டனுக்கு தனித்தனியக சிறு குறிப்புகளும் அதில் இருந்துள்ளது.

குறிப்பிடுபடியான பரிசாக அவை இல்லை என்றாலும், கடந்த 9 வருடங்களாக அது தங்களுக்கு புகட்டிய பாடம் என்பது, சகிப்புத்தன்மை, புரிதல், விட்டுக்கொடுத்தல் மற்றும் பொறுமை என்பதே என இருவரும் தெரிவித்துள்ளனர்.

 

SHARE