திறமையான டிராவிட் நிரூபித்த அஸ்வின்: புகழும் டேனியல்

369
இந்திய பந்துவீச்சாளர் அஸ்வினின் பந்துவீச்சு தனிச்சிறப்பு வாய்ந்தது என்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, சமீபத்தில் நடந்த உலகக்கிண்ண போட்டிகளை எடுத்துக் கொண்டால், சில சுழற்பந்து வீச்சாளர்களே சவாலை சிறப்பாக எதிர்கொண்டனர். குறிப்பாக இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர்.

முழங்கையை மடக்கி வீசுவதில் கட்டுப்பாடுகள் வந்த பிறகு ஸ்பின் பந்து வீச்சு சற்றே மாறியுள்ளது. இதனால் 2 ஸ்பின்னர்கள் பீல்டில் தற்போது இல்லை.

ஆனால் மரபான ஸ்பின் பந்து வீச்சாளர்கள் தங்களது திறமைகளினால் நம்பமுடியாத அளவுக்கு சுழற்பந்து வீச்சில் வெற்றி பெற முடியும் என்பதை அஸ்வின் தன் பந்து வீச்சினால் நிரூபித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் எந்த துடுப்பாட்ட வீரருக்கு பந்து வீசியதை மகிழ்ச்சியாக கருதுகிறீர்கள் என்ற கேள்விக்கு , “டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் என்றே நான் கூறுவேன். அவர் பந்தின் அளவை சரியாகக் கணிப்பதன் மூலம் ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக தனிச்சிறப்பான திறமை கொண்டவர்.

ராகுல் டிராவிட்டை சிரமப்படுத்தும் ஒரு பந்தை நான் அவருக்கு வீசியதாக என்னால் கூற முடியவில்லை. அவரது துடுப்பாட்டத்தின் முன்னால் சுழற்பந்து விச்சாளர்கள் செயலிழந்து விடுகின்றனர் என்று கூறியுள்ளார்.

SHARE