தீய ஆவிகளை விரட்ட பட்டாசு கொளுத்திய பிலிப்பைன்ஸ் மக்கள்: தீக்கிரையான 1000 குடிசைகள் 

285

 

பிலிப்பைன்ஸ் நாட்டில் தீய ஆவிகளை விரட்ட பொதுமக்கள் ஒன்று கூடி பட்டாசு கொளுத்தியதில் ஒருவர் உயிரிழந்து, ஆயிரம் குடிசைகளும் தீக்கிரையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக துரதிர்ஷ்டத்தை துரத்தும் சடங்கு ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த சடங்கில் அதிக சத்தம் தரும் பட்டாசுகளை கொளுத்தி அந்த ஆண்டில் தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டத்தை பொதுமக்கள் துரத்தி வந்துள்ளனர்.

இந்த ஆண்டும் வழமையாக அரசின் அறிவுத்தல்களுக்கு இடையே கோலாகலமாக துவங்கியுள்ளது பட்டாசு கொளுத்தும் இந்த சடங்கு.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற இந்த சடங்கில் சிறுவர்கள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் துரதிஷ்டத்தை துரத்தி புத்தாண்டை வரவேற்று வந்துள்ளனர்.

திரளான மக்கள் ஒன்று திரண்டு போட்டியிட்டு பட்டாசு கொளுத்தி வந்ததில் தவறுதலாக கொளுத்தப்பட்ட ராக்கெட் பட்டாசு ஒன்று அருகாமையில் உள்ள குடிசைப்பகுதியில் விழுதுள்ளதாக கூறப்படுகிறது.

அதில் இருந்த நெருப்பு படர்ந்து பற்றிக்கொண்டதில் அப்பகுதியில் உள்ள ஆயிரம் குடிசைகள் எரிந்து சாம்லாகியுள்ளது.

இந்த களேபரத்தில் சிக்கி காயமடைந்த பொதுமக்கள் 380 பேருக்கும் அதிகமானோரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.

தீக்காயங்களுடன் தப்பிய ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இந்துபோன்ற ஒரு நிகழ்வில் 850 பேர் படுகாயமடைந்து 200 குடிசை வீடுகள் தீக்கிரையானது குறிப்பிடத்தக்கது.

SHARE