தீவிரவாதிகளை சுட்டுக்கொள்வது ஏற்புடையதல்ல: சர்ச்சையை ஏற்படுத்திய பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர்

314
தீவிரவாதிகளை சுட்டுக்கொள்ளும் அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட்டிருப்பது  ஏற்புடையதல்ல என்று பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவரான ஜேரிமி கொர்பென் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் தொழிலாளர்கள் கட்சியின் தலைவராக உள்ளவர் ஜேரிமி கொர்பென்.

பிரித்தானிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

கடந்த திங்களன்று தனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, பிரித்தானியாவில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களை சுட்டுக்கொல்லும் அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட்டிருப்பது குறித்து அதிர்ப்தி தெரிவித்தார்.

அரசின் இந்த கொள்ளை ஏற்புடையதல்ல என்று தெரிவித்த அவர்  இது மிகவும் ஆபாத்தானது என்றும் அவர் கூறினார்.

மேலும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள்  இன்னும் மோசமாக விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

அப்போது பாராளுமன்ற உறுப்பினரான ஹிலாரி பென், தீவிரவாதிகளை சுட்டுக்கொல்லும் சலுகை பொலிசாருக்கு வழங்கப்பட்டிருப்பது சரிதான் என்றும் உயிருக்கு ஆபத்தான நேரத்தில் அப்படிதான் செயல்பட முடியும் என்றும் கூறியுள்ளார்.

எனினும் இதை ஏற்கமறுத்த கொர்பென் மேலும் சில கருத்துகளை கூறியுள்ளார்.

இதனால் கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ப்தி அடைந்தனர்.

பின்னர் ஆலோசனை கூட்டம் முடிந்து வெளியே வந்த தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர், இது குறித்து பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், ஜேர்மி கொர்பென் எந்த கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அவர் ஒரு வெட்கக்கேடான நபர்.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அவருக்கு  வெளிப்படையாகவே சவால் விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பிரித்தானிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE