தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபா நீக்கம்: அமெரிக்கா நடவடிக்கை

323
அமெரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையேயான தூதரக உறவுகள் கடந்த 1961-ம் ஆண்டு துண்டிக்கப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பனிப்போர் நடந்து வந்தது. மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கொரில்லா அமைப்புகளுக்கு கியூபா ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, அந்த நாட்டை தீவிரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலும் அமெரிக்கா சேர்த்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மீண்டும் துளிர்க்க தொடங்கியது. இதன் பலனாக இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இவ்வாறு உறவு மேம்படுவதை தொடர்ந்து, கியூபாவை தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்க ஒபாமா விரும்பினார். இதற்காக 45 நாள் மறு ஆய்வுக்காலம் ஒன்றையும் அவர் அறிவித்தார். இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, தீவிரவாத நாடுகள் பட்டியலில் இருந்து கியூபா நீக்கப்பட்டது. இந்த பட்டியலில் இனி ஈரான், சூடான் மற்றும் சிரியா நாடுகள் மட்டுமே உள்ளன.

இந்த நடவடிக்கை மூலம் கியூபாவுக்கு பொருளாதார உதவி, ஆயுத ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் போடப்பட்டிருந்த தடை நீங்கியது. எனினும் கியூபா மீது கடந்த 1960-ம் ஆண்டுகளில் போடப்பட்டிருந்த விரிவான வர்த்தகம் மற்றும் ஆயுதங்கள் விற்பனை தடை அமலில் உள்ளதால், மேற்படி தடைகள் அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE