தீவிர பௌத்தவாதியான மஹிந்த, அமெரிக்க போதகரிடம் ஆசி பெற்றது ஏன்?

282

 

இலங்கையில் தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ள நிலையில், நீதித்துறையும் வலுவடைந்து வருவதாக அண்மைய கால பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றன.

சர்வதிகார ஆட்சி நிலவிய இலங்கையில், தற்போது நீதித்துறை திறம்பட செயற்பட ஆரம்பித்துள்ளமையால், பல்வேறு மோசடியாளர்களுக்கு கிலி பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதில் முக்கியமானவர்களாக ராஜபக்ஷ ரெஜிமென்டும் அவர்கள் சார்ந்த கும்பலைச் சேர்ந்தவர்களுமே அடங்கும்.

கடந்த ஆட்சியில் பலமான அமைச்சர்களாக செயற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. சிலர் சிறையில் அடைக்கப்பட்டும் வெளியில் வந்துள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது ரெஜிமென்டின் பல தரப்பினர் சிறைச்சாலை செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜபக்ஷ ரெஜிமென்டுடன் மிகவும் நெருக்கி செயற்பட்டவரும், அவர்களுக்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவருமான துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த எட்டாம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றில் துமிந்த ஆஜர்படுத்திய வேளையில், மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அன்றையதினம் மிகவும் அச்சமடைந்த நிலையில் காணப்பட்ட மஹிந்த, அமெரிக்க மத போதகர்களின் ஆசிர்வாதங்களை பெற்றதாக தெரிய வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

அமெரிக்காவில் செயற்படும் தேவாலயம் ஒன்றின் பிரதான மத போதகர் கிப்போ டொலர் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரும் அவரின் குழுவினருமே மஹிந்தவுக்கு ஆசிர்வாதங்களை வழங்கியிருந்தனர். இதன்போது மஹிந்தவின் முகத்தில் பெரும் பதற்ற நிலை காணப்பட்டமை புகைப்படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

இரண்டு பக்கமும் மஹிந்த மீது கை வைத்துக் கொண்ட போதகர்கள் “கடவுளே இந்த அப்பாவியின் மனதில் ஏற்பட்டுள்ள அச்சத்தில் இருந்து அவரை விடுவியும்” என ஜெபம் செய்துள்ளனர்.

தம்மை சிங்கள பௌத்தர் என கூறிக் கொள்ளும் மெதமுலன மஹிந்த ராஜபக்ச இவ்வாறு மனதில் ஏற்பட்ட அச்சம் காரணமாக பிரார்த்தனை செய்துக் கொண்டுள்ளார் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

துமிந்த உள்ளிட் குழுவினருக்கு எதிராக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், மஹிந்த கடும் அச்சம் அடைந்துள்ளதாக அவரின் குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்று முதல் பல்வேறு நபர்களை வீட்டிற்கு அழைத்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரிய ஆபத்து தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார். “தற்போது எங்களில் யாருக்கும் ஆபத்து இல்லை என நிம்மதியாக இருக்க முடியாதென அவர் கலந்துரையாடல்களின் போது கூறியுள்ளார்.

துமிந்தவினால் வழக்கின் தீர்ப்பு தீர்மானிக்கப்பட்டிக்கும் என்று தாங்கள் நினைத்தோம் என கலந்துரையாடலில் கலந்துக் கொண்டிருந்த பலர் தெரிவித்துள்ளனர்.

துமிந்த சில்வா நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் வருகை தந்த சந்தர்ப்பத்தில் மிகவும் சாதாரணமாகவே வந்தார். அவர் சிறைக்கு செல்லும் எண்ணத்தில் நீதிமன்றம் வரவில்லை. வீட்டிற்கு செல்லவே வந்துள்ளார் என ஒருவர் கூறும் போது, வீட்டிற்கு செல்வது உறுதி என எண்ணியமையால் துமிந்த மக்கள் கூட்டங்களை நீதிமன்றத்திற்கு முன் அழைத்து வரவில்லை என மற்றொருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது என்றால் நடைப்பெறுபவை ஒன்று நல்லதாக இல்லை என கூறிய மஹிந்த, நீதிமன்றத்தை விருப்பியதனை போன்று இயக்க முடியவில்லை என்றால் நமக்கு எதிர்காலம் அச்சத்துடனே காணப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்தவின் புதல்வர்களான நாமல் மற்றும் யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதில் பல கொலைச் சம்பவங்களும் அடங்கும். இதன் காரணமாக மஹிந்த பெரும் அச்சமடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த ஆட்சியின் போது நீதிமன்றத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த மஹிந்த, இன்று கடவுளை தன்பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்

SHARE