துடுப்பாட்ட செய்தி 3 அறிமுக வீரர்களுடன் ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

325

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 1ம் திகதி தொடங்குகிறது.

இதற்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று அறிமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

துடுப்பாட்ட வீரர் செஹான் ஜெயசூரிய, சுழற்பந்து வீச்சாளர் ஜெப்ரி வண்டர்சே மற்றும் சகலதுறை வீரர் தனுஷ்க குணதிலக ஆகியோர் தங்களது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளனர்.

அதே போல் அனுபவ தொடக்க வீரரான டில்ஷான், வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆகியோர் அணிக்கு திரும்புயுள்ளனர்.

மேலும், டெஸ்ட் போட்டியில் பார்ம் இல்லாமல் தவித்து வரும் திரிமன்னே ஒருநாள் போட்டியில் இடம்பெற்றுள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் நல்ல நிலையில் உள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி:-

மேத்யூஸ், திரிமன்னே, டில்ஷான், குஷால் ஜெனித் பெரேரா, தினேஷ் சந்திமால், மிலிந்த சிறிவர்தன செஹான் ஜெயசூரிய, சேனாநாயக்க ஜெப்ரி வண்டர்சே, அஜந்தா மெண்டீஸ், மலிங்கா, நுவான் குலசேகரா, சுரங்க லக்மால், துஷ்மன்த சமீரா மற்றும் தனுஷ்க குணதிலக.

SHARE