துமிந்தவின் மரண தண்டனைக்கு மஹிந்தவே காரணம்! தந்தை குற்றச்சாட்டு

291

 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதற்கமைய ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்படும் தினத்தில் தூக்கிலிடவுள்ள நிலையில், குறித்த குற்றவாளிகள் அதுவரையில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தனது மகனின் இந்த அவல நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே என துமிந்த சில்வாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

துமிந்த சில்வா மற்றும் பாரத லக்ஷ்மன் ஆகியோரை தம்முடன் மஹிந்த இணைத்துக் கொண்டமையே இந்த மோதலுக்கு பிரதான காரணம் என துமிந்த சில்வாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியாக எல்லோரும் எனது மகனை கைவிட்டுள்ளார்கள். எவ்வாறெனினும் தற்போது மகனுடன் தான் இல்லை என மிகவும் வருத்தத்துடன் துமிந்த சில்வாவின் தந்தை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

SHARE