துருக்கி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அய்லான் பற்றி கேலிச்சித்திரம்: மீண்டும் சர்ச்சையில் சார்லி ஹெப்டோ

302

பிரான்சை சேர்ந்த பத்திரிகையான சார்லி ஹெப்டோ அய்லான் மரணம் குறித்து விமர்சித்து வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பிரான்ஸ் நாட்டில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை சில மாதங்களுக்கு முன்னர் முகமது நபிகள் பற்றி கேலிச்சித்திரம் வரைந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஐ..எஸ் அமைப்பினர் பத்திரிகை அலுவலகத்தில் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் துருக்கி நாட்டு கடலெல்லையில் கரை ஒதுங்கிய அயலான் என்ற மூன்று வயது சிறுவனை பற்றி கேலிச் சத்திரம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கேலிச் சித்திரத்தில் ஏசு கிறிஸ்து போன்ற தோற்றத்தில் ஒருவர் கடல் நீரின் மீது நடந்து வருவதைபோலவும், அருகே, சிரியா நாட்டு குழந்தை கடலில் மூழ்கிய ஓவியமும் வரையப்பட்டுள்ளது.

மேலும், கிறிஸ்தவர்கள் நீரில் மேல் நடக்கும் வல்லமை கொண்டவர்கள் என்றும், இஸ்லாமிய குழந்தை நீரில் மூழ்கத்தான் முடியும் என்றும் அந்த கார்டூன் விளக்க குறிப்பு கொடுத்துள்ளது.

இந்த கேலிச் சித்திரத்திற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

SHARE