தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது காலிறுதிப் போட்டி இலங்கை அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து…

347
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் முதலாவது காலிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் இன்று மோதுகின்றன.

இன்றைய போட்டியில் இலங்கை அணியில் தரிந்து குஷல் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். காயமடைந்த இலங்கை அணி வீரர் ரங்கன ஹேராத்துக்கு பதிலாக இவரை அணியில் இணைத்துக் கொள்ள ஐ.சி.சி அனுமதியளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக திலகரட்ன டில்ஷான் மற்றும் குசேல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர். ஆனால் இருவரும் சிறிது நேரத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

குசேல் பெரேரா (3) அப்போட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இவரைத் தொடர்ந்து டில்ஷான் (0) டக்-அவுட் ஆக ஸ்டெய்ன் பந்து வீச்சில் நடையை கட்டினார்.

பின்னர் நிதான ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணிக்கு திரிமான்னே கைகொடுத்தார். இவர் 41 ஓட்டங்களில் இம்ரான் தாகிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

இலங்கை அணி 21 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழந்து 76 ஓட்டங்களை குவித்துள்ளது. தற்போது சங்கக்காரா (15), ஜெயவர்த்தனே (2) விளையாடி வருகின்றனர்.

SHARE