தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் தலைவர் கிளைவ் ரைஸ் மரணம்!

321
தெனஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் கிளைவ் ரைஸ் உடல்நலக் குறைவால் மரணமடைந்துள்ளார்.66 வயதான கிளைவ் ரைஸ் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெற கடந்த மார்ச் மாதம் இந்தியா சென்றிருந்தார்.தொடர்ந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்த அணித்தலைவர் கிளைவ் ரைஸ் கடந்த செவ்வாய்க்கிழமை கேப்டவுன் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

சிறந்த சலகதுறை ஆட்டக்காரரான கிளைவ் ரைஸ் இனவெறி காரணமாக தென்ஆப்பிரிக்கா அணிக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த காலத்தில் தான் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

ஆனால் அவர் 482 முதல்தர போட்டிகளில் விளையாடி உள்ளார்.

டிரான்ஸ்வால், நடால் மற்றும் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடி 26331 ஓட்டங்கள் எடுத்துள்ளார். மேலும், 930 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

SHARE