தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிரேமி சுமித் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- ‘இந்த சீசனில் தென்ஆப்பிரிக்க அணி இந்தியா மற்றும் இங்கிலாந்து என்று இரு கடினமான தொடர்களில் விளையாட இருக்கிறது. இதை நினைக்கும் போது எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. இந்த தென்ஆப்பிரிக்க அணிக்கு இது முக்கியமான காலக்கட்டமாகும். இந்திய மண்ணில் நடக்க உள்ள 4 டெஸ்ட் கொண்ட தொடர் எளிதாக இருக்கப்போவதில்லை. ஏனெனில் இங்கு நிறைய இடங்களுக்கு பயணிக்க வேண்டி இருக்கும். அது மட்டுமின்றி இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை என்பதால் இந்த தொடர் எங்கள் அணிக்கு நிச்சயம் கடினமாக இருக்கும். இருப்பினும் இந்த தொடர் நல்லவிதமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய தொடரில் அசத்தினால், அதன் பிறகு இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக செயல்படுவோம் என்று நினைக்கிறேன். 2006-ம் ஆண்டுக்கு பிறகு நாங்கள் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. அச்சாதனையை எங்களது வீரர்கள் தொடர்ந்து தக்கவைத்து பெருமைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

323

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிரேமி சுமித் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- ‘இந்த சீசனில் தென்ஆப்பிரிக்க அணி இந்தியா மற்றும் இங்கிலாந்து என்று இரு கடினமான தொடர்களில் விளையாட இருக்கிறது. இதை நினைக்கும் போது எனக்கு கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. இந்த தென்ஆப்பிரிக்க அணிக்கு இது முக்கியமான காலக்கட்டமாகும். இந்திய மண்ணில் நடக்க உள்ள 4 டெஸ்ட் கொண்ட தொடர் எளிதாக இருக்கப்போவதில்லை.

ஏனெனில் இங்கு நிறைய இடங்களுக்கு பயணிக்க வேண்டி இருக்கும். அது மட்டுமின்றி இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை என்பதால் இந்த தொடர் எங்கள் அணிக்கு நிச்சயம் கடினமாக இருக்கும். இருப்பினும் இந்த தொடர் நல்லவிதமாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய தொடரில் அசத்தினால், அதன் பிறகு இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக செயல்படுவோம் என்று நினைக்கிறேன். 2006-ம் ஆண்டுக்கு பிறகு நாங்கள் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. அச்சாதனையை எங்களது வீரர்கள் தொடர்ந்து தக்கவைத்து பெருமைப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

SHARE