தென்கொரியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் பான் கீ முனை இன்று சந்திக்கிறார்

258

 

 

தென்கொரியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் தென்கொரிய பிரதமர் ஹவாங் கியோ ஆங் ஆகியோரை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்கவுள்ளார்.

தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இன்று ஆரம்பமாகவுள்ள 107ஆவது சர்வதேச றோட்டறி மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே பிரதமர் ரணில் தென்கொரியா சென்றுள்ளார். குறித்த மாநாட்டின் ஒரு கட்டமாகவே ஐ.நா பொதுச் செயலரையும் தென்கொரிய பிரதமரையும் இலங்கை பிரதமர் சந்திக்கவுள்ளார்.

இதன்போது, இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து பிரதமர் ரணில் விளக்கமளிக்கவுள்ளதோடு, ஆட்சி மாற்றத்தின் பின்னர் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதிவரை நடைபெறும் சர்வதேச றோட்டறி கழக மாநாட்டில், பிரதமர் ரணில் சிறப்புரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.ranil-and-ban-ki-moon

SHARE