தென் கொரிய வீரர் உலக சாதனை

283

ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டியில் 72 அம்புகள் எய்தல் போட்டியின் ரேங்கிங் சுற்றில் தென் கொரியாவைச் சேர்ந்த உலக சாம்பியனான கிம் ஊ ஜின் 700 புள்ளிகளைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் ரியோ ஒலிம்பிக்கில் உலக சாதனைபடைத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார் கிம். முன்னதாக 2012-இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் தென் கொரியாவின் மற்றொரு வீரரான டாங் ஹியூன் 699 புள்ளிகளைப் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியாவின் அதானு தாஸ் 683 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தைப் பிடித்தார்

SHARE