தெற்கில் 14 பாதாள உலகக்குழுக்கள் செயற்பட்டு வருகின்றன என சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

615

 

தெற்கில் 14 பாதாள உலகக்குழுக்கள் செயற்பட்டு வருகின்றன என சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

poli

பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட விசேட குழு நடத்திய ஆய்விலேயே இந்த தகவல் வெளியானது. சுற்றுலா விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்களிடம் கப்பம் பெறல், ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகம் ஆகியனவே இந்த பாதாள உலகக் குழுக்களின் பிரதான வருமானம் எனக் கூறப்படுகின்றது. பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு இடையிலான மோதல்களால் ஏற்படும் மரணங்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான கொலைகள் காரணமாக தெற்கில் பாதாள உலகக் குழு பீதி ஏற்பட்டுள்ளது. பலபிட்டிய, ஹிக்கடுவ உள்ளிட்ட தெற்கின் பல இடங்களை மையமாகக் கொண்டு இந்த பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. பாதாள உலகக் குழுக்களின் இருப்பிடங்கள் அவர்களின் செயற்பாடுகள் குறித்த தகவல்களை பொலிஸார் திரட்டியுள்ளனர். இந்தக் குழுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

SHARE