தேசியக்கல்விக் கல்லூரியில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக பா.உ சதாசிவம் வியாழேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார்.

248

 

மட்டக்களப்பு தேசியக் கல்லூரியில் நிலவிவரும் குடிநீர் சம்மந்தமான பிரச்சினை இன்று அக் கல்லூரி மாணவர்களிடையே மற்றும் அவ் கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களிடையே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றது.

e19b0004-3d72-4b57-8b24-e41ed195ad3b e22d1cdf-b3f3-4ca1-948a-0110e6e3b1b7

மாணவர்கள் அருந்துவதற்கு மற்றும் தம் அன்றாடதேவையை பூர்த்தி செய்வதில் நீர்ப்பயண்பாட்டை பயண்படுத்துவதில் மிகவும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

அங்கு சென்று பார்வையிட்ட மட்டக்களப்பு பா.உ சாதாசிவம் வியாழேந்திரன்(அமல்) அக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் இப்  பிரச்சினை பற்றிக்கூறுகையில், தாம் நீரைப் பயன்படுத்துவதில் மிகவும் அவதியுறுவதாகவும், நீரில் காணப்படும் காணப்படும் அழுக்கு காரணமாக குளித்தலின் பின் சிறுது நேரத்தில் உடம்பில் அரிப்புத்தன்மை காணப்படுவதாகவும் கூறினர். மேலும் உடம்பில் தேமல் மற்றும் அலர்ஜிக் தன்மையும் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இது பற்றி பா.உ கல்லூரியின் உப நிருவாகத் தலைவர் S.ஜெயக்குமாரிடம் கலந்துரையாடியபோது இது தொடர்பில் தாம் பல நாட்களாக பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும்  தற்போது சில நாட்களின் முன் இதற்கான தீர்வுக்கான வழிகளை பல இடங்களில் முயற்சித்து வருவதாகவும், அதற்கான தீர்வையும் தற்போது பெற்றுள்ளதாகவும் இன்றும் சில தினங்களில் சுத்தாமான நீரைப் பெறமுடியுமெனவும் கூறினார்.

K. SUBAJAN

SHARE