தேவாலயத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர்: பாதிரியார் உட்பட 9 பேர் பலியான பரிதாபம்:(வீடியோ இணைப்பு)

332
அமெரிக்காவில் தேவாலயத்துக்கு புகுந்து 9 பேரை சுட்டு கொன்றவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் தென் கரொலினா பகுதியில் உள்ள சார்லெஸ்டனில் புகழ்பெற்ற இமானுவேல் ஏஎம்இ தேவாலயம் உள்ளது.

இந்நிலையில் கடந்த புதனன்று இரவில் தேவாலயத்தில் இருந்த ஒருவர் மற்றவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.

இந்த தாக்குதலில் தேவாலயத்தின் மதபோதகர் ரிவெரெண்ட் கிலிமெண்டா பின்க்கினி உட்பட 9 பேர் பலியாகியதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்களில் 9 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் பெண்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேவாலயத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவர் பெயர் டையிலன் ஸ்டொர்ம் ரூப் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை வியாழனன்று பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன வேறுபாடு காரணமாக இந்த படுகொலைகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கருப்பர்களுக்கு சொந்தமான அந்த தேவாலயத்தில் வெள்ளைய வாலிபரான ரூப் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கிச்சூடு குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகையில், இது மிகவும் முட்டாள்தனமான செயல், நாட்டின் பிரச்சனையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதையே இந்த சம்பவம் நினைவுப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

இதேபோல் ஹிலாரி கிளிண்டன் உட்பட பிற அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

 

SHARE