தொடர் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக களையிழந்த பாரீஸ் நகரம்

283
பிரான்ஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக அந்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நாகரீகம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றுக்கு புகழ் பெற்ற இடமாக திகழ்ந்து வருகிறது.

மேலும் அங்குள்ள ஈஃபில் கோபுரம் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த பாரீஸ் நகரில் கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 130 பேர் பலியாகினர். மேலும் தீவிரவாதிகள்  தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால் பாரீஸுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதன் காரணமாக அங்குள்ள விடுதிகளுக்கு சுமார் 270 மில்லியன் யூரோ அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜப்பான் அரசும் நரிட்டாவில் இருந்து பாரீஸுக்கு விமான சேவை மேற்கொள்வதற்கு விதித்துள்ள தடையை நீட்டித்துள்ளது.

இதேபோல் புகழ்பெற்ற ஈபில் கோபுரத்தை பார்க்கவரும் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில் 7.1 மில்லியன் மக்கள் ஈபில் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர். ஆனால் 2015ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 6.91 மில்லியனாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆண்டு யூரோ கால்பந்தாட்டம், வர்த்தக கண்காட்சி ஆகியவை பிரான்ஸில் நடைபெறவுள்ளதால் விரைவில் சுற்றுலா துறையில் பிரான்ஸ் வளர்ச்சியடையும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE