ஆண்டான்டு காலங்கலாக வாழ்ந்துவருகின்ற மக்களின் சுயநிர்ணயங்களில் ஒன்றான தொழில் தர்மத்தை உலக அரங்கிற்கு காட்டும் ஒன்றாக இந்த உழைப்பாளர் தினம் அமைகின்றது. உலகெங்கிலும் நெற்றி வியர்வைசிந்தி உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தினப்புயல் பத்திரிகை சிரம்தாழ்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. போரின் அடிமைவிலங்கினை உடைத்து சுதந்திரக்காற்றை சுவாசிக்காத போதிலும் மனித வாழ்க்கையில் உழைப்பு என்பது இன்றியமையாததொன்று. நாட்டின் சுதந்திரம் இறையாண்மை பேணப்பட்டு வராதபோதிலும் தொழிலாளர்களின் முயற்சிகளின் மூலமே இன்று ஒவ்வொரு நாடும் தலைதூக்கி நிற்கின்றது. குறிப்பாக இலங்கையில் வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மேல் தென் மாகாணங்களில் வாழ்கின்ற உழைப்பாளர்களுக்கும் இலங்கை மற்றும் உலக நாடுகளில் வாழ்கின்ற உழைப்பாளர் வர்க்கத்தினரும் சாந்தி, சமாதானம், இறையருள், பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்திநிற்கின்றோம்.
– தினப்புயல் பத்திரிகை –