தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டெல்லி விளாசித் தள்ளிய யுவராஜ், அகர்வால்…

379
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி தொடர்ச்சியான 11 தோல்விக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணிக்கு ஷேவாக் (47), சஹா (39) சிறப்பான ஆட்டம் கொடுக்க, அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில், தொடக்க ஆட்டக்காரர் அகர்வால் 68 ஓட்டங்கள் குவித்து அணிக்கு நல்ல நிலைமையை உருவாக்கினார்.

அதே போல கடைசி 2 போட்டிகளில் சொதப்பிய யுவராஜ் (55) அரைசதம் கடந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் வெற்றி கணக்கை தொடங்கி இருக்கும் டெல்லி அணி, நீண்ட கால தோல்வி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

SHARE