நகுலனின் தந்தை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

301

 

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் முன்னாள் சிறப்பு தளபதி நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி கைது செய்யப்பட்டமைக்கு எதிராக யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

13051495_1680345182216700_8687225091421925898_n 13051556_1680345185550033_9196206676719384601_n 13092188_1680345172216701_8427336929766343044_n

இந்த முறைப்பாடு இன்று புதன்கிழமை காலை நகுலனின் தந்தை மற்றும் மனைவி ஆகியோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

நகுலன் நேற்று செவ்வாய்கிழமை காலை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இவர் வவுனியாவிற்கு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, புனர்வாழ்வழிக்கப்பட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட அவர் திருமணம் முடித்து வாழ்ந்து வரும் நிலையிலேயே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தமது மகன் கைது செய்துள்ளமை நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதாக நகுலனின் தாயார் தெரிவித்தார்.

SHARE