நடிகைகளின் காதல் வலை: கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போன ஜாகீர்கான்

341
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கான் தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை மிரட்டியவர்.டெஸ்ட் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்களில் கபில் தேவ்க்கு பிறகு தனது வேகத்தால் துடுப்பாட்டக்காரர்களை கலங்கடிப்பது ஜாகீர்கான் மட்டுமே.இவர் ஒரு மராட்டி முஸ்லீம் குடும்பத்தில் அக்டோபர் 7, 1978ம் ஆண்டு பிறந்தவர். பள்ளியிலே கிரிக்கெட் ஆர்வம் பற்றிக் கொள்ள கிரிக்கெட்டில் முழு ஆர்வத்தையும் செலுத்த ஆரம்பித்தார்.கிரிக்கெட்டில் காலடி:-

கடந்த 2000ம் ஆண்டு ஜாகீர்கான் பெங்களூர் தேசிய கிரிக்கெட் சங்கத்தால் தெரிவு செய்யப்பட்டார்.

இதனால் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் கென்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் களமிறங்கினார்.

பிறகு 2005ம் ஆண்டு ஸ்ரீசாந்த் மற்றும் ர.பி.சிங் ஆகியோரின் வருகையால் சில மாதங்கள் ஒதிக்கி வைக்கப்பட்ட ஜாகீர்கான் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தெரிவு செய்யப்பட்டார். அந்த போட்டிகளில் அனல் பறக்கும் ஆட்டத்தை காட்டினார்.

இதனால் அதே ஆண்டில் இங்கிலாந்தில் நடக்கும் வொர்செஸ்டர்ஷைர் அணியில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் அக்தருக்கு பதிலாக சேர்க்கப்பட்டார்.

வொர்செஸ்டர்ஷைர் தோல்வியை தழுவினாலும், சோமர்செட் அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகளை கைப்பற்றி வியக்க வைத்தார்.

இதனால் கடந்த 100 வருடத்தில் 10 விக்கெட் கைப்பற்றிய முதல் வொர்செஸ்டர்ஷைர் வீரரானார் ஜாகீர்.

அதுமட்டுமல்ல எசெக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். விக்கெட் கீப்பரின் தவறால் அவரின் 10வது விக்கெட் பறிபோனது.

2006ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அதன் பிறகு நடைபெற்ற 2007ம் ஆண்டு உலகக்கிண்ணத்திலும் இந்திய அணியில் சிறப்பான பங்காற்றினார்.

2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத்தில் ஜாகீர்கானின் பங்களிப்பு மிகப் பெரியது. பந்துவீச்சில் தடுமாறிய இந்திய அணியை தனி ஆளாக காப்பாற்றினார். இந்தியா உலகக்கிண்ணம் வெல்ல இவரின் பந்துவீச்சும் முக்கிய காரணம்.

கழற்றிவிடப்பட்ட ஜாகீர்கான்:-

இதன் பின்னர் ஜாகீர்கான் தொடர்ச்சியான காயம், உடற்தகுதியின்மை போன்ற காரணத்தால் அணியில் இருந்து நீண்ட காலமாக விலகியே இருந்தார்.

இருப்பினும் அவர் இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத்தில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் யுவராஜ், கம்பீர், ஷேவாக், ஹர்பஜன் ஆகியவர்களுடன் ஜாகீர் கானும் நீக்கப்பட்டார்.

முடிவுக்கு வந்த கிரிக்கெட் வாழ்க்கை:-

இதைத் தொடர்ந்து ஜாகீர்கானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று அதிரடியாக அறிவித்திருந்தார் ஜாகீர் கான்.

காதல் வாழ்க்கை:-

கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்தி நடிகை இஷா ஷ்ராவனியை காதலித்து வருகிறார் ஜாகீர். இந்த காதலுக்கு ஏற்கனவே இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி விட்டனர்.

அவர் 2005ம் ஆண்டுதான் முதன்முதலில் இஷாவை சந்தித்தார். அப்போதே இருவரும் காதலில் விழுந்து விட்டனர்.

இந்தக் காதலை மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர். நடிகை கைகூகார் கானின் வருகையால் இடையில் அவர்களுக்குள் பிரிவும் ஏற்பட்டது.

2 ஆண்டுகள் பேசிக் கொள்ளாமலேயே இருந்தனர். பின்னர் மறுபடியும் இருவரும் இணைந்தனர். அதன் பிறகு இருவருக்கும் இடையே முன்பை விட காதல் வலுவானது.

இந்நிலையில் இஷாவை திருமணம் செய்து கொள்ளுமாறு ஜாகீர்கானின் வீட்டில் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் உலகக்கிண்ணத்தை வென்ற பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று ஜாகீர் தனது வீட்டில் கூறியிருந்தார்.

2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை இந்தியா வென்ற பிறகு இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை அவர் மறுத்திருந்தார். யாரையும் திருமணம் செய்யவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதற்கிடையில் அவர் மொடல் அழகி ராமொனாவுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும், ஒரு ஷாப்பில் மாலில் இருவரும் கையோர்த்து நடந்து செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.

எப்படி இருப்பினும் திருமணமாகாத கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ஜாகீர் கானும் டாப்பில் தான் இருக்கிறார்.

SHARE