தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. இவர் இயக்குனர் மட்டுமின்றி நடிகராகவும் மக்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.
நடிகை குஷ்பூவை 5 வருடங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு இரு மகள்கள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம். ஆனால், நடிகை குஷ்பூவால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டதாம்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் சுந்தர் சி கலந்துகொண்டுள்ளார். அப்போது இந்த விஷயம் குறித்து பேசினார்.
உண்மையை கூறிய சுந்தர் சி
குஷ்பூர்விற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோது மருத்துவர் ஒருவர் , ‘உங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது’ என குஷ்பூவிடம் கூறிவிட்டார். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத என மருத்துவர் கூறியபின், குஷ்பூ கண்ணீர் விட்டு அழுதார்.
‘நீங்க வேறு திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என குஷ்பூ என்னிடம் கூறினார். அதன்பின் இருவரும் அந்த மனநிலையிலேயே வாழ்ந்தோம். ஆனால், கடவுள் வேறு ஒரு கணக்கை போட்டுள்ளார். எங்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. ஒரு பெண் தேவதை மட்டுமல்லாமல் எங்களுக்கு இரண்டு பெண் தேவதைகள் மகளாக பிறந்துள்ளார்கள்” என கூறினார்.
சுந்தர் சி இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் அரண்மனை 4. இப்படம் வருகிற மே 3ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.