நடுத்தெருவில் ரகளை செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரொனால்டோ (வீடியோ இணைப்பு)

352
போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மாறுவேடத்தில் சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.ஒரு நிறுவத்தின் விளம்பரத்திற்காக மாறுவேடமிட்டுக் கொண்ட ரொனால்டோ, ஸ்பெயின் மார்ட்டிட் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள தெருவில் கால்பந்து விளையாடுகிறார்.அங்கு நடந்து செல்லும் அனைவரையும் வம்பிழுக்கிறார். அவர் மாறுவேடத்தில் இருப்பதால் மக்களால் அவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

சுமார் ஒரு மணிநேரம் கழித்து அந்த தெருவில் நடந்து சென்ற ஒரு சிறுவனிடம் கலந்துரையாகிறார் ரொனால்டோ.

பின்னர் “இது உனக்கு தான்” என்று ரொனால்டோ என்ற தன் பெயரை கால்பந்தில் ஆட்டோகிராப் ஆக எழுதி அந்த சிறுவனிடம் கொடுத்து தனது வேடத்தை கலைக்கிறார்.

அவர் ரொனால்டோ என்பதை அறிந்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் அவரை சூழ்ந்து கொள்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகியுள்ளது.

SHARE