நடேசன், புலித்தேவன் உட்பட்ட போராளிகள் குறித்து ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு.

343

விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உட்பட பல போராளிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தது அதன் பின்னர் காணமற்போனது குறித்த விபரங்களை அவர்களது உறவினர்கள் ஜெனீவாவில் 24 ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் தெரிவிக்கவுள்ளனர்.

download (1)War_Crime_Pulee_body

பசுமை தாயகம் மற்றும் அமெரிக்காவின் தமிழர் பாதுகாப்பு சபை ஆகியன இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளன.

2009 ம் ஆண்டு 18000ற்கும் மேற்பட்ட தமிழர்களும் அவர்களுடைய தலைவர்களும் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர் . இன்று வரை அவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை என இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் பேச்சாளர் பாலு தெரிவித்துள்ளார்.

dcp15285

இலங்கை அரசாங்கம் தன்னால் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த முழுமையான பட்டியலை வெளியிடுமாறு விடுக்கப்படும் வேண்டுகோளை புறக்கணித்து வருகின்றது.

சரணடைந்தவர்களிற்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிவந்தால் மாத்திரமே இலங்கையில் நிரந்தர சமாதானம் சாத்தியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE