நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு மஹிந்த அணியினர்

297

 

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக முறைப்பாடு செய்வதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவு அணியான ஒன்றிணைந்த எதிரணியினர் எதிர்வரும் 31ஆம் திகதி ஜெனீவா செல்லவுள்ளனர்.

ஜெனீவாவில் அமைந்துள்ள அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்தில் முறையிடவே, ஒன்றிணைந்த எதிரணியினர் செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் ஒன்றிணைந்த எதிரணியினரின் குரல் நசுக்கப்படுவதாகவும், அரசாங்கம் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கும் அவர், தொடர்ந்தும் இதனைக் கண்டு மௌனித்திருக்க முடியாதென்றும் அதற்கெதிராக முறைப்பாடு செய்யவே ஜெனீவா செல்வதாவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, டளஸ் அழகப்பெரும, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரே ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்றில் கூட்டு எதிரணியினரின் குரல் ஒடுக்கப்படுவதாகவும், சட்டத்திற்கு முரணான வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே அனைத்து நாடாளுமன்ற ஒன்றியத்திற்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக அவ் அணியினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.magnta_teammagnta_team1magnta_team2magnta_team3

 

SHARE