நான்கு தசாப்தங்களுக்கு பின் இலங்கை அரச தலைவருக்கு அழைப்பு விடுத்த ஜேர்மனி: ஜனாதிபதி

293

 

42 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் தலைவர் ஒருவருக்கு ஜேர்மனிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று வீதி அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. அரசாங்கம் என்ன செய்தது என்று சிலர் கேட்கின்றனர்.

இலங்கையில் கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரச தலைவர்கள் முதல் வருடத்தில் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யவில்லை. கடந்த வருடம் நாங்கள் அரசாங்கத்தை ஸ்தாபித்த வருடம்.

ஜேர்மனிய சான்சலரின் அழைப்பின் பேரில் அடுத்த மாதம் நான் ஜேர்மனிக்கு செல்கின்றேன்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு பிறகு 42 வருடங்களுக்கு பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு ஜேர்மனி, உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளது.

உள்நாட்டுக்குள் எம்மை விமர்சிக்கும் நபர்கள் எப்படி விமர்சித்தாலும் உலக நாடுகள் எமக்கு பாரியளவில் ஆசிர்வாதம் செய்கின்றன.

நாட்டில் சிறந்த ஆட்சி இருப்பதன் காரணமாக உலக நாடுகள் இலங்கையை ஆசிர்வதிக்கின்றன.

விமர்சிப்பவர்களை பார்த்து பதில் கூறுவது எமது பணியல்ல, பொறுப்பேற்றுக்கொண்ட வேலையை செய்வதே எமது பணியாகும் என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

SHARE