நான் கோஹ்லியின் ரசிகன்.. அவரின் ஆக்ரோஷத்தை விரும்புகிறேன்: கங்குலி பாராட்டு

315

எனது அணித்தலைவர் பதவியின் சாதனைகளை கோஹ்லியால் தான் முறியடிக்க முடியும் என்று முன்னாள் இந்திய தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை 2–1 என்ற கணக்கில் வென்று சாதனை புரிந்தது.

இதைத் தொடர்ந்து கோஹ்லி மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இவர் தென் ஆப்பிரிக்க தொடரிலும் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தான் கோஹ்லியின் ரசிகன் என்றும், அவரால் மட்டுமே என்னுடைய தலைவர் பதவி சாதனைகளை முடியடிக்க முடியும் எனவும் முன்னாள் இந்திய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “தலைவர் பதவியில் கோஹ்லி அசத்துகிறார். அவர் என்னை விட சிறந்த தலைவராக உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன்.

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளுக்கு எதிராக போது தான் அவரது தலைவர் பதவி முக்கிய சவாலாக இருக்கும்.

அவர் எப்போதுமே வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறார். அவரது இந்த ஆக்ரோஷத்தை நான் விரும்புகிறேன்.

தென்ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாட அவரை வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

SHARE