நான் தான் தொடக்க வீரராக களமிறங்குவேன்: சச்சினை மிரட்டும் கங்குலி

291

அமெரிக்காவில் 30 கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் “கிரிக்கெட் ஆல் ஸ்டார்ஸ்” டி20 தொடர் விரைவில் களைகட்டவிருக்கிறது.

இந்த தொடரின் முதல் டி20 போட்டி 7ம் திகதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. 2வது போட்டி வரும் 11ம் திகதி ஹூஸ்டனிலும், 3வது மற்றும் கடைசி போட்டி லாஸ் ஏஞ்சல்சில் 14ம் திகதியும் நடைபெற உள்ளது.

கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னேயும் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்த தொடரில் வார்னே தலைமையிலான ‘வார்னேயின் வாரியார்ஸ்’ அணியும், சச்சின் தலைமையிலான ‘சச்சினின் பிளாஸ்டர்’ அணியும் மோதுகின்றது.

இதில் சச்சின் அணியில் கங்குலி இடம் பிடித்துள்ளார். இந்த தொடருக்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

கங்குலி வலைப்பயிற்சியில் சுழற்பந்துக்கு எதிராக பயற்சி எடுத்தார். அப்போது அவருடைய வழக்கமான கவர் டிரைவ் ஷாட் அடித்து பழகினார்.

பயிற்சிக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய கங்குலி, “நான் தான் தொடக்க வீரராக களமிறங்குவேன். அப்படி இல்லாவிட்டால் அடுத்த வினாடியே கொல்கத்தாவுக்கு விமானத்தை பிடித்து சென்று விடுவேன்.

இதை நான் சச்சினிடம் கிண்டாக கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘என்னுடைய கை, கால்கள் மற்றும் இடுப்பின் வலிமை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

SHARE