நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் பாரிய கட்சி மாறல்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

412

நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தரப்பில் பாரிய கட்சி மாறல்கள் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

dummies1-1

2015ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தன் மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்புடன் இந்த கட்சி மாறல் இடம்பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதன்போது முக்கிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு செல்வர் என்று செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

இந்த செய்தியை ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்கவை கோடிட்டு செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

இதேவேளை எதிர்க்கட்சியில் இருந்தும் பலர் நாளை அரசாங்கக் கட்சிக்கு மாறுவர் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கட்சிதாவல் தற்காலிக நிறுத்தம்! செவ்வாய் மீண்டும் தொடரும்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை கட்சி தாவல் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் தீர்மானி்த்துள்ளனர்.

நாளை நடைபெறவிருக்கும் வரவு செலவுத்திட்டத்தின் போது அரசாங்கத்தை தோற்கடித்து, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் உட்கார வைக்கும் திட்டமொன்று எதிர்க்கட்சிகளின் கூட்டணியிடம் முன்னர் இருந்தது.

எனினும் தற்போதைய நிலையில் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

அவ்வாறு நடந்தால் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியிழக்க நேரிடும்.

இதனை கருத்தில் கொண்டு நாளைய வரவு செலவுத்திட்ட வாக்களிப்பின் போது அரசாங்கம் வெற்றிபெறும் வகையில் வாக்களிக்க அரசின் மீது அதிருப்தியுடன் இருக்கும் முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

எனினும் செவ்வாய் தொடக்கம் கட்சி தாவும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மூன்று பேர் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இதற்கிடையே ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி தாவும் எண்ணத்தை கைவிடும் வகையில் வாகனம் மற்றும் பண அன்பளிப்புகளை வழங்க அரசாங்கத்தின் உயர்மட்டம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது முன்னாள் பிரதமர் ரத்தினசிறி விக்கிரமநாயக்க மற்றும் அவரது புதல்வருக்கு பெருந்தொகைப் பணம் கைமாற்றப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.

எனினும் இவர்கள் இருவரும் அடுத்த வாரத்துக்குள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வது உறுதி என்றும் குறித்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது

SHARE