நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி

366
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆவது சா்வதேச ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நொட்டிங்காமில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீா்மானித்து.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவா்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 349 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் கேன் வில்லியம்சன் 90 ஓட்டங்களையும், எலியட் 55 ஓட்டங்களையும் மார்ட்டின் குப்டில் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனா்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் வில்லி , பென் ஸ்டோக்ஸ் ஆகியோா் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினா்.

350 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 44 ஓவா்களுக்கு 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஓட்டங்களையும், மோர்கன் 113 ஓட்டங்களையும் ஜோ ரூட் 106 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனா்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக மாட் ஹென்ரி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக மோர்கன் தெரிவானார்

05 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் சமநிலையிலுள்ள நிலையில் உள்ளன. தொடரின் வெற்றியைத் தீா்மானிக்கும் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

SHARE