நீண்ட நேரம் AC ஓடினாலும் மின்கட்டணம் குறைய வேண்டுமா? இதை செய்யுங்கள்

126

 

இரவு முழுவதும் AC ஓடினாலும் மின்கட்டணம் குறைவாக வருவதற்குரிய சில டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இன்னும் சில இடங்களில் கோடை காலம் போலவே வெயில் வெளுத்து வாங்குகிறது.

கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.

ஆனால், நீண்ட நேரம் AC ஓடினால் மின்கட்டணமும் தலைசுற்றும் அளவுக்கு வந்துவிடும். அதை எப்படி குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

சரியான வெப்பநிலை
நீங்கள் AC -யை பயன்படுத்தும்போது சரியான வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். அதாவது ஏசியை நாம் குறைவான வெப்பநிலையில் எப்போதும் வைத்திருக்க கூடாது. பொதுவாக பலரும் ஏசியை 16 அல்லது 18 டிகிரியில் வைத்தால் நல்ல குளிர்ச்சி தரும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், BUREAU of Energy Efficiency (BEE) படி, மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரியாகும். இதனால், இந்த வெப்பநிலையில் ஏசியை வைத்தால் உங்களது உடல்நிலை பாதிப்படையாமல் இருக்கும்.

அதுவும் நீங்கள் 24 டிகிரியில் வைத்தால் மின்சாரம் அதிகம் சேமிக்கப்படும். அதாவது, வெப்பநிலையை ஒரு டிகிரி உயர்த்தினால் 6 சதவீதம் மின்சாரம் சேமிக்க முடியும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.

கதவு மற்றும் ஜன்னலை மூடுங்கள்
நாம் ஏசியை ஆன் செய்வதற்கு முன்பு அறையின் ஜன்னல் மற்றும் கதவை மூட வேண்டும். இதனால், குளிர் காற்று வெளியே போகமாலும், அனல் காற்று உள்ளே வராமலும் இருக்கும்.

நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்களது ஏசி கடினமாக உழைக்க வேண்டும். இதனால் மின்சாரமும் அதிகம் தேவைப்படும்.

Sleep Mode
தற்போது பெரும்பாலான ஏசிகள் Sleep mode அம்சத்துடன் வருகின்றன. இதனால் 36 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும். உங்களுக்கு தேவையான குளிர்ச்சியைப் பெற்றவுடன், ஏசியை தானாக ஸ்லீப் மோடில் செல்லச் செய்யலாம்.

மின்விசிறி பயன்படுத்த வேண்டும்
ஏசியுடன் மின்விசிறியைப் பயன்படுத்தும்போது அது அறையின் ஒவ்வொரு மூலையிலும் ஏசி காற்றைச் செலுத்த உதவுகிறது. இதனால், நீங்கள் ஏசி வெப்பநிலையை மிகவும் குறைவாக வைக்க தேவையில்லை. இதனால் மின்சாரமும் சேமிக்கப்படும்.

SHARE