நீருக்குள் மூழ்கப்போகும் பூமி. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்.

346
பூமியிலுள்ள நிலப்பரப்புகள் மறைந்து மீண்டும் தண்ணீர் உலகமாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.இங்கிலாந்தின் Bristol பல்கழைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் Bruno Dhuime என்பவரும் அவரது குழுவினரும் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.கண்டங்களின் மேலோட்டின் தடிமன் குறைந்து வருவதாகவும், 2 பில்லியன் ஆண்டுகளில் பூமி முழுவதும் மீண்டும் தண்ணீரால் சூழப்படும் எனவும் தெரியவந்துள்ளது.

சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் தண்ணீரிலிருந்து நிலம் வெளிவரத் தொடங்கியது. கண்டங்களின் மேலோட்டின் தடிமன், அதன் அதிகபட்ச அளவான 40கி.மீ., அளவை ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எட்டியது.

அதன் பின் அதன் தடிமன் குறைந்தபடியே உள்ளதாகவும், கண்டங்களின் மேலோடுகள் அரிப்படைந்து வருவதால், பூமி மீண்டும் நீரில் மூழ்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE