நுரையீரல் சுத்தமாக வேண்டுமா? இதை பின்பற்றுங்கள்.

313

25-1453714627-3fiberrichdietcankeeplungdiseaseatbay

பெருநகரங்களில் வாழ்க்கை, புகைப்பிடித்தல் உள்ளிட்ட காரணங்களால் மூச்சுக்குழாயிலும் நுரையீரலிலும் படியும் நச்சுப்பொருட்களின் அளவு மிக அதிகமாகும்.

இது பல்வேறு நுரையீரல் தொடர்பான நோய்க்கும் புற்றுநோய் பிடிபடுவதற்கும் காரணமாக அமைகின்றது. நோய் நொடியற்ற வாழ்க்கைக்கு நுரையீரலை தூய்மையாக பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும். 3 நாட்களில் நுரையீரலில் படிந்திருக்கும் நச்சுக்களை நீக்கும் 8 வழிகள் இவை. கடைபிடித்தால் பலன் நிச்சயம்.

வாரத்தில் 3 நாட்கள் புலால் உணவு, பால், மது இவை எதுவும் எக்காரணம் கொண்டும் தொட வேண்டாம். இரவு படுக்கைக்கு முன்பு ஒரு கோப்பை க்ரீன் டீ பயன்படுத்துங்கள்.

  • காலை உணவுடன் அன்னாசி பழச்சாறு பருகுங்கள். காலை உணவருந்திய பின்னர் சிறிது இடைவெளி விட்டு கேரட் சாறு பருகுங்கள்.
  • மதியவேளை உணவிற்கு காய்கறிகள் மட்டும் பயன்படுத்துங்கள். உணவருந்திய பின்னர் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் நச்சுக்களை அகற்ற பெரிதும் உதவுகிறது.
  • மாலை வேளையில் தேநீர் வேண்டாம். மாறாக அன்னாசி பழச்சாறு பருகுங்கள். நொறுக்குத்தீனிக்கு மாற்றாக ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள்.
  • இரவு Cranberry சாறு பருகுங்கள். இது நுரையீரலில் தங்கியுள்ள பாக்டீரியாவை வெளியேற்ற உதவும்.
  • அடுத்தநாள் காலை யோகா அல்லது நுரையீரலுக்கு பயன் தரும் வகையிலான பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள்.
  • இரவு Steam bath மேற்கொள்ளுங்கள். இதனால் நுரையீரலில் படிந்துள்ள நச்சுக்கள் வியர்வையால் வெளியேற்றப்படும்.
  • இறுதியாக வெந்நீரில் இரண்டு சொட்டு யுகலிப்டஸ் எண்ணெய் கலந்து நீராவி பிடியுங்கள். இது நுரையீரலுக்கு புத்துணர்ச்சியை தரும்.
SHARE