நெப்போலியன் போனபர்ட்டை தோற்கடித்த போரின் 200ஆம் ஆண்டு தினம்: இளவரசர் சார்லஸ், பிரதமர் கேமரூன் பங்கேற்பு(வீடியோ இணைப்பு)

342

புகழ்பெற்ற வாட்டர்லூ போரின் 200வது நினைவு தினத்தில் அரச குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பெல்ஜியன் நாட்டின்  வாட்டர்லூ என்ற இடத்தில் பிரான்சுக்கும் பிரித்தானியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த 1815ம் ஆண்டு யூன் மாதம் 18ம் தேதி போர் நடைபெற்றது.

இதில் பிரன்சின் நெப்போலியன் பொனபர்ட் தோற்கடிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த போரின் 200வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் , கொர்ன்வால் இளவரசி கமிலா உள்ளிட்ட பல அரச குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் போரில் ஈடுபட்டவர்களின் வம்சாவளியினரும் கலந்துகொண்டனர்.

பிரித்தானிய ராணுவத்தினர் 1815 ஆண்டு போரில் ஈடுபட்ட வீரர்களின் உடையை போல் உடை அணிந்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் போரில் மரணமடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஐரோப்பியாவின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

எனினும் பிரான்ஸ் அதிபர் பிரான்கொஸ் ஹோலாண்டி மற்றும் ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா அகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE