நேபாள நிலநடுக்கம்- 4000 உயிரிழப்பு தாண்டியது

371

நேபாளத்தை தாக்கிய பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3218 ஆக உயர்ந்துள்ளதென அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சுமார் 6500 பேர் படுகாயடைந்துள்ளதாக, அந்நாட்டின் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தை கடந்த சனிக்கிழமை 7.8 ரிக்டர் அளவில் தாக்கிய பாரிய நிலநடுக்கம், அந்நாட்டு மக்களை மட்டுமன்றி அங்கு தங்கியிருந்த இந்தியா மற்றும் சீனா போன்ற நாட்டு மக்களையும் காவுகொண்டது.

நேற்றைய தினமும் சில இடங்களில் ஆங்காங்கே நிறிய அளவிலான நில நடுக்கங்கள் உணரப்பட்டுள்ள நிலையில், நேபாள் தலைநகர் காத்மண்டு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது இருப்பிடங்களுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனர்.

நேற்றைய சிறிய அளவிலான நிலநடுக்கத்தையடுத்து, மீட்புப் பணிகளிலும் தாமதம் எற்பட்டது. எனினும் நேற்று இரவு முழுவதும் மீட்பு நடவடிக்கைள் இடம்பெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்பு பணியாளர்கள் மற்றும் ஹெலிகொப்டர் ஆகியவற்றை அனுப்பி உலக நாடுகள் உதவி வருகின்ற அதேவேளை, நிவாரணப் பொருட்களையும் அனுப்பி வைத்தவண்ணமுள்ளன.

சுமார் 80 வருடங்களுக்குப் பிறகு, நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE