பகிடிவதை என்ற போர்வையில் பற்றைக் காட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு அவர்கள் மீது பாலியல் ரீதியான இம்சைகள்-கல்வியமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க

444

 

Ragging-scenes-in-3-Idiot-030110சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை பகிடிவதை என்ற போர்வையில் பற்றைக் காட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு அவர்கள் மீது பாலியல் ரீதியான இம்சைகள் மேற்கொள்ளப்பட்டமை நிரூபணமாகியதைத் தொடர்ந்தே அந்தப் பகிடிவதையில் ஈடுபட்ட சிரேஷ்ட மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது என உயர் கல்வியமைச்சர் எஸ்.பி.திஸநாயக்க தெரிவித்தார்.

பகிடிவதை என்ற போர்வையில் பற்றைக் காட்டில் சகதி நிறைந்த குழிகளைத் தோண்டி புதிய மாணவ, மாணவியரை அரை நிர்வாணமாக்கி அந்தக் குழிகளில் இறக்கி சேற்றால் அபிஷேகம் செய்தும் அந்தக் கோலத்தில் அவர்களைப் புகைப்படம் எடுத்தும் இம்சைப்படுத்தினர். ஜே.வி.பி. ஆதரவாளர்களான இவர்கள் பல்கலைக்கழகங்களில் நடக்கும் மாணவர் தேர்தல்களில் வென்று பதவிக்கு வரும் மாணவ, மாணவியரை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக, அவர்களைத் தாக்கியும் கொச்சைப்படுத்தியும் தங்களது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்ட பல துர்ப்பாக்கிய சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறியுள்ளன.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்கள் இவ்வாறு கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாக உபவேந்தருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து அவர் விரிவுரையாளர்கள் குழுவொன்றை அந்தப் பற்றைக் காட்டுக்கு அனுப்பி பாதிக்கப்பட்ட மாணவர்களை மீட்டிருக்கிறார். இத்தகைய மிலேச்சத்தனமான செயல்களைப் பகிடிவதை எனும் பெயரில் செய்வதை ஒருபோதும் அனுமதிக்கவோ அல்லது மன்னிக்கவோ முடியாது. இந்தக் கொடூரச் செயலைச் செய்துள்ள மாணவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்”

SHARE