பஞ்சாப் அணி: 7வது வெற்றியை தொடருமா பெங்களூர் அணி?

366
 

sports-kings-xi-punjabs-david-miller-hopeful-winning-ipl-2014 Virat-Kohli-M_10

ஐ.பி.எல். போட்டியின் 50–வது ‘லீக்’ ஆட்டம் மொகாலியில் இன்று நடக்கிறது.இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்– கோஹ்லி தலைமையிலான ரொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

பெங்களூர் அணி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 13 புள்ளிகள் பெற்று (ஒரு முடிவு இல்லை) பெற்று 5–வது இடத்தில் உள்ளது. ‘பிளேஆப்’ சுற்று வாய்ப்பில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பெங்களூர் அணி கடுமையாக போராடும் அந்த அணி பலவீனமான பஞ்சாப்பை வீழ்த்தி 7–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

கடந்த 2 ஆட்டத்தில் பெங்களூர் அணியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. கிறிஸ்கெய்ல், டிவில்லியர்ஸ் சிறப்பாக ஆடினார்கள்.

இதுதவிர அணித்தலைவர் கோஹ்லி, ஸ்டார்க் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளார். அதே உத்வேகத்துடன் விளையாடி பஞ்சாப்பை வீழ்த்தும் நிலையில் உள்ளது.

கடந்த 6–ந் திகதி நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை நசுக்கி இருந்ததால் பெங்களூர் அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.

“பிளேஆப்’ வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட பஞ்சாப் அணி 2 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

10 ஆட்டத்தில் தோற்று 4 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.

அந்த அணி தொடர்ச்சியாக 7 ஆட்டத்தில் தோற்றது. இன்றைய ஆட்டத்திலாவது அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE