பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு…. ஷாக் ஆயிடாதீங்க…!

358

டாப் 10 பணக்காரர்கள் லிஸ்ட்டுகளையே பார்த்து பழகிப் போன கண்களுக்கு ஒரு சேஞ்சுக்காக இந்தியாவின் டாப்-5 பணக்கார பிச்சைக்கரர்கள் லிஸ்ட் தாங்க இது.

பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின். தற்போது 49 வயதாகும் ஜெயினுக்கு மும்பை பரேல் பகுதியில் 2 பிளாட்டுகள் சொந்தமாக இருக்கிறது.

ஒரு பிளாட்டின் மதிப்பு 70 லட்ச ரூபாய். அதோடு சொந்தமாக ஜுஸ் கடையை வாடகைக்கு விட்டு அதில் இருந்து மாதம் 10 ஆயிரம் ரூபாயை வாடகையாக சம்பாதிக்கிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு 2 கோடிக்கும் மேல்.

இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடிக்கும் பிச்சைக்காரரும் மும்பையை சேர்ந்தவர் தான். இவரது பெயர் கிருஷ்ணகுமார் கீதே. இவரது தினசரி வருமானம் 1500 ரூபாய். இவருக்கு மும்பை புறநகர் பகுதியான நாலாசோப்ராவில் சொந்த பிளாட் உண்டு. இங்குதான் இவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்தியாவின் மூன்றாவது பணக்கார பிச்சைக்காரராக இருப்பவர் பாட்னாவை சேர்ந்த சர்வாதியா தேவி. பாட்னா நகர ரயில்களில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் பிச்சை எடுக்கத் தொடங்கினார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது மகளுக்கு ஜாம் ஜாம் என்று திருமணம் செய்து வைத்தார். இன்சூரன்ஸ் பாலிசிக்கு மட்டும் ஆண்டுக்கு 36 ஆயிரம் ரூபாயை பிரீமியமாக சர்வாதியா தேவி கட்டுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சம்பாஜி காலே என்பவரும் மும்பையை சேர்ந்த பிச்சைக்காரர்தான். இவருக்கு தினசரி வருமானமாக ஆயிரம் கிடைக்கிறது. மும்பையில் விரார் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இது தவிர ஷோலாப்பூர் மாவட்டத்தில் இரண்டு சொந்த வீடுகளும் உள்ளன. இந்த தொழிலை மிக்க மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக தெரிவிக்கிறார் சம்பாஜி காலே.

இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடிக்கிறார் கொல்கத்தாவை சேர்ந்த லட்சுமி தாஸ். கடந்த 1964ஆம் ஆண்டு தனது 16வது வயதில் பிச்சை எடுக்கத் தொடங்கிய லட்சுமி தாசுக்கு, வங்கி அக்கவுண்ட் உண்டு. போலியோவால் பாதிக்கப்பட்ட லட்சுமி தாஸ்,ஒரு சேஞ்சுக்காக பிச்சை எடுக்கத் தொடங்கினார்.

அதில் சேர்ந்த வருமானத்தை கொண்டு கொல்கத்தாவில் வங்கியில் கணக்கு தொடங்கினார். தற்போது 64 வயதான அவருக்கு வங்கி சார்பாக கிரெடிட் கார்டும் வழங்கப்பட்டுள்ளது.

– See more at: http://www.manithan.com/news/20150527115261#sthash.PCwQUgnq.dpuf

SHARE