பணியில் இருந்தபோது ஆபாசம் படம் பார்த்த கப்பல் படை கமாண்டர்: பணியில் இருந்து நீக்கிய அரசு

287

 

பணியில் இருந்தபோது அரசு கணிணியில் ஆபாசப்படம் பார்த்த குற்றத்திற்காக அமெரிக்க நாட்டு கப்பல் படை கமாண்டர் ஒருவர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க கப்பல் படையில் உள்ள Navy’s Carrier Strike Group 15 என்ற பிரிவின் கமாண்டராக ரிக் வில்லியம்ஸ் என்பவர் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்துள்ளார்.பணியில் சிறப்பாக பணியாற்றியதற்காக வில்லியம்ஸை பாராட்டி இதுவரை 16 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பணியில் இருந்தபோது அரசு கணிணியில் ஆபாசப்படம் பார்த்ததாக வில்லியம்ஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை அன்று துவங்கிய நிலையில், அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கப்பற்படை வீரர்களுக்கு உத்தரவுகளை பிறபிக்கும் உயர் பதவியில் இருந்துக்கொண்டு ஆபாசப்படம் பார்த்தது கப்பல் படை விதிமுறைகளின் அடிப்படையில் கடுமையான குற்றமாகும்.

எனவே, வில்லியம்ஸ் வகித்து வந்த பதவியில் இருந்து நீக்குவதாக கப்பல் படை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வில்லியம்ஸ் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கமாண்டர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் கேப்டன் Chris Barnes என்பவர் தற்காலிகமாக அந்த பதவியில் இருப்பார் என அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE