பதக்கத்தை தூக்கி எறிந்த தந்தை.. காதலுக்கு தடைபோட்ட தாய்: யுவராஜின் சோகங்கள்

343
இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டாலும், தனக்கெனெ மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் யுவராஜ் சிங்.ஆரம்ப கால அதிரடியால் இந்திய அணியில் தனக்கென ஒரு நிலையான இடத்தை யுவராஜ் வைத்திருந்தார்2000ம் ஆண்டு ஒருநாள் அணியில் இடம்பெற்ற யுவராஜ், 2003ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.2007ம் ஆண்டு டி20 உலகக்கிண்ணத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர் பிராட் ஓவரில் யுவராஜ் அடுத்தடுத்து விளாசிய 6 சிக்சர்கள் அனைவரையும் வியக்க வைத்தது.

அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட யுவராஜ் இந்தியா உலகக்கிண்ணம் வெல்ல உறுதுணையாக இருந்தார்.

2011ம் ஆண்டு உலகக்கிண்ணத்திலும் தனது நிலையான ஆட்டத்தால் இந்தியாவுக்கு உலகக்கிண்ணம் வென்று கொடுத்தார்.

அதன் பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் 1 வருட சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார்.

இதன் பிறகு தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இருப்பினும் ஐபிஎல் போட்டிகளில் அதிக மதிப்புள்ள வீரர்கள் பட்டியலில் யுவராஜ் என்றுமே முதலிடம் தான்.

கடந்த ஆண்டு யுவராஜை பெங்களூர் அணி ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் யுவராஜ் டெல்லி அணியால் ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்டார். இருப்பினும் இரு அணிகளையும் யுவராஜ் ஏமாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் இடம்பெறாத நிலையில், யுவராஜ் தற்போது உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

பதக்கத்தை தூக்கி எறிந்த யுவராஜின் தந்தை:-

யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், தாய் ஷப்னம் சிங். இருவரும் பிரிந்து விட்ட நிலையில் யுவராஜ் தாயுடன் வசித்து வருகிறார்.

யோகராஜ் முன்னாள் இந்திய வீரர். இவர் யுவராஜ் சிங் கிரிக்கெட் வீரர் ஆவதையே விரும்பினார். ஆனால் யுவராஜ் சிங்கிற்கு ஆர்வம் எல்லாம் “ரோலர் ஸ்கேட்டிங்” மேல் தான்.

இதன் காரணமாக 14 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய “ரோலர் ஸ்கேட்டிங்” அணியில் இடம் பிடித்த யுவராஜ் சாம்பியன் கிண்ணத்தையும் வென்றார்.

ஆசையாக தான் வாங்கிய பதக்கத்தை தனது தந்தையிடம் காட்டிய யுவராஜூக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

அந்த பதக்கத்தை கையில் வாங்கிய அவரது தந்தை அதை தூக்கி எறிந்து “ நீ கிரிக்கெட் மட்டுமே விளையாட வேண்டும். ஸ்கேட்டிங்கை மறந்து விடு” என்று கூறினார்.

அன்றைய தினத்தில் இருந்து அவரே யுவராஜை கிரிக்கெட் பயிற்சி பெற அழைத்துச் செல்வார். இப்படி தான் யுவராஜ் கிரிக்கெட் வீரராக உருவெடுத்தார்.

காதலுக்கு தடைபோட்ட தாய்:

யுவராஜ் சிங், பாலிவுட் நடிகையான கிம் சர்மாவை 4 வருடமாக தீவிரமாக காதலித்தார். பின்னர் திருமணம் பற்றி தனது அம்மாவிடம் யுவராஜ் கூற அதற்கு அவர் மறுப்பு கூறிவிட்டார்.

யுவராஜூம் அம்மா பையானாக இருந்ததால் தனது அம்மாவின் பேச்சிற்கு மறுப்பு தெரிவிக்காமல் காதலை விட்டுவிட்டார்.

இதைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன் உடன் நெருக்கமாக இருந்தார் யுவராஜ். அவரும் யுவராஜின் பிறந்த நாளை கொண்டாட்ட வெளிநாட்டிற்கு எல்லாம் பயணமாகினார். ஆனால் இவர்களதும் உறவும் சிக்கிரமாகவே முடிந்து விட்டது.

இதன் பிறகு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடும் போது அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா உடன் கிசுகிசுக்கப்பட்டார்.

இதற்கு ஏற்றார் போல் அவரது காதலரான நெஸ் வாடியா உடன் பிரீத்தி ஜிந்தாவுக்கு பிரச்சனை ஏற்பட்டது. அப்போது யுவராஜே ஆறுதலாக இருந்துள்ளார். ஆனால் இவர்களது கிசுகிசும் அடங்கிப் போனது.

இதைத் தொடர்ந்து மினிஷ்ஷா லம்பா, அனுஷா, அன்சால் குமார், பிரீத்தி ஜகான்ஜினி, ரியா சென் ஆகியோருடன் சேர்த்து யுவராஜ் பேசப்பட்டார்.

தற்போது யுவராஜ், நடிகை நிஹா துபியா உடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

SHARE