பதுளை கொஸ்லந்த மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வடக்கு மக்களின் அன்பான நிவாரணப் பொருட்களை வழங்கியது வடக்கு மாகாணசபை…

420
பதுளை கொஸ்லந்த மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து வடக்கு மக்களின் அன்பான நிவாரணப் பொருட்களை வழங்கியது வடக்கு மாகாணசபை…
பதுளை கொஸ்லாந்தை மண்சரிவில் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை தற்காலிகமாக தங்கவைக்கப்பட்ட ஐந்து இடங்களுக்கு  நேற்று 24-11-2014 திங்கள் கிழமை வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் திரு.சி.வி.கே.சிவஞானம், மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் திரு.பா.டெனிஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்கள் திரு.ரவிகரன், திரு.ஆணல்ட், திருமதி.மேரி கமலா, எதிர்கட்சி சார்பில் திரு.தர்மபால மற்றும் மன்னார் நகர சபையின் பிரதி நகரபிதா திரு.ஜேம்ஸ் ஜேசுதாசன், மன்னார் மாவட்ட போதகர் ஐக்கியம் சார்பாக தலைவர் மற்றும் இரண்டு போதகர்கள்    ஆகியோர் அடங்கிய குழுவினர் பார்வையிட்டு அவர்களோடு வடக்கு மக்களின் சார்பாக தமது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொண்டதோடு, அந்த மக்களின் தேவைகள் அங்குள்ள சிறுவர்களின் தேவைகள் போன்றவை தொடர்பாகவும் விசாரித்தரிந்ததோடு வடக்கு மாகாணம் முழுவதும் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்ட்களையும் அந்த மக்களுக்கு வடக்கு மக்கள் சார்பாக அன்பாக வழங்கி வைத்தனர்.
மேலும் இந்தப்பயணம் காலை 10:00 மணி முதல் மாலை 8:30 மணிவரை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்த நிவாரண பணிக்கு தமது ஆதரவை வழங்கிய அனைத்து வடக்கு மாகாண மக்களுக்கும் வடக்கு மாகாண சபை சார்பாகவும் மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது விசேட நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றார்.
unnamed (2) unnamed (3) unnamed (4) unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (8) unnamed (9) unnamed (10) unnamed (11)
THINAPPUYAL NEWS
SHARE