பயிற்சியாளர் மாற்றம் வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்: சர்தார்சிங் கருத்து

337
இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பால் வான் ஆஸ் (நெதர்லாந்து) சமீபத்தில் மாற்றப்பட்டு புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் உயர் திறன் மேம்பாட்டு இயக்குனராக இருந்து வந்த ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நியமிக்கப்பட்டார். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே இருக்கும் நிலையில் பயிற்சியாளர் மாற்றம் செய்யப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய ஆக்கி அணியின் கேப்டன் சர்தார்சிங்கிடம் கேட்ட போது,

‘அடிக்கடி பயிற்சியாளர் மாற்றப்படுவதால் வீரர்கள் கஷ்டத்தை சந்திக்க வேண்டியது இருக்கும். பயிற்சியாளர் மாற்றம் அணியின் இயல்பான செயல்பாட்டை நிச்சயம் பாதிக்கும். அது மட்டுமின்றி அணியின் ஆட்ட யுக்தியும் மாறும். இருப்பினும் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பயிற்சியாளர் மாற்றத்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படாது’ என்று தெரிவித்தார்.

SHARE