பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் மேலும் 9 பேர் தூக்கிலிடப்பட்டனர்

365
பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்நோக்கி சுமார் 8 ஆயிரம் கைதிகள் சிறைகளில் காத்திருக்கின்றனர். இவர்களில் 12 பேர் நேற்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டது உலகெங்கிலும் உள்ள தூக்கு தண்டனைக்கு எதிரான நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கு முன்னர் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்திருந்த பாகிஸ்தான் அரசு, பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்தின் மீது கடந்த ஆண்டு தீவிரவதிகள் தாக்குதல் நடத்தியதில் இருந்து முக்கிய தீவிரவாதிகள் மற்றும் கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றி வருகிறது.

இவ்வகையில், நேற்று காலை கராச்சி உட்பட ஆறு நகரங்களின் முக்கிய சிறைகளில் இருந்த 12 மரண தண்டனை கைதிகள் தூக்கிலிடப்பட்டனர். இதனையடுத்து, இன்றும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர், பைசலாபாத், ராவல்பிண்டி, ஜங், மியான்வாலி மற்றும் அட்டோக் சிறைகளில் மேலும் 9 கைதிகள் தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.

கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதியில் இருந்து இன்றுவரை பாகிஸ்தானில் 48 கைதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

SHARE