பாகிஸ்தானில் வேகமாகப் பரவி வரும் இந்து மதம்!

331

பாகிஸ்தான், சவுதி அரேபியாவில் இந்து மதம் வேகமாகப் பரவி வருவதாக அமெரிக்க நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி ஆய்வு நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையம், மதரீதியான மக்கள் தொகை குறித்து ஓர் ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டது.

அந்த ஆய்வறிக்கையில், பாகிஸ்தான், சவுதி அரேபியாவில் இந்துக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இந்திய பெற்றோர் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

அதாவது ஒரு குடும்பத்தில் 3.2% சராசரியில் குழந்தைகள் பிறப்பதாக ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை தற்போது 1.1% உள்ளது.

இந்த எண்ணிக்கை 2050-ம் ஆண்டில் 1.6% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்திலும் இந்துக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் வரும் 2050-ம் ஆண்டில் இந்துக்களின் மக்கள் தொகை மேலும் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இவை தவிர அயர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, கிரேக்கம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்துக்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.

SHARE