பாகிஸ்தானை பந்தாடி 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்திருப்பேன்: சொல்கிறார் ஷேவாக்

330

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடந்திருந்தால் நான் கட்டாயம் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்திருப்பேன் என்று ஷேவாக் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ஷேவாக் கடந்த 20ம் திகதி தனது பிறந்த நாள் அன்று சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடர்பான பல விடயங்களை நினைவு கூர்ந்து வருகிறார்.

டெஸ்ட் போட்டிகளில் ஷேவாக் உச்சத்தில் இருக்கும் போது, 2006ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் தொடர் நடைக்கவில்லை.

இந்நிலையில் ஷேவாக் கூறுகையில், “இந்தியா- பாகிஸ்தான் தொடர் தொடர்ந்து நடைபெற்று இருந்தால் நான் கண்டிப்பாக 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்திருப்பேன்.

ஒன்று அல்லது இரண்டு தொடர்கள் நடந்திருந்தால் கூட ஒரு தொடரில் குறைந்தது 400 முதல் 500 ஓட்டங்களை அடித்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.

ஷேவாக் பாகிஸ்தானுக்கு எதிரான அதிக ஓட்டங்கள் குவித்துள்ளார். அந்த அணிக்கு எதிராக மட்டும் 9 டெஸ்டில் 14 இன்னிங்சில் 1276 ஓட்டங்கள் குவித்துள்ளார். சராசரி 91.14 ஆகும்.

104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷேவாக் 8586 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 23 சதங்களும், 32 அரை சதங்களும், 2முச்சதமும் அடங்கும். சராசரி 49.34 ஆகும்.

SHARE