பாகிஸ்தான் அணித்தலைவர் மகிழ்ச்சியில் நல்ல வேளை நாங்கள் தப்பிவிட்டோம் என்று கூறியுள்ளார்…

364
 

நடைபெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் பாகிஸ்தான் தனது முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது.

நேற்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த  வெற்றி குறித்து பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல்-ஹக் கருத்து வெளியிடுகையில்,

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தோற்றிருந்தால் நாங்கள் உலகக்கிண்ணத்தை விட்டு வெளியேற வேண்டி இருந்திருக்கும். நல்ல வேளை நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.

நாங்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்பதை உங்களால் உணர முடியாது. இந்த ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு எளிதாக இல்லை, இருவகை தன்மையுடன்  காணப்பட்டது.

5 பிரதான பந்துவீச்சாளர்கள் இருப்பதால், 250 முதல் 260 ஓட்டங்கள் எடுத்தால் சவாலாக இருக்கும் என்று நினைத்தேன். இறுதியில் 15 முதல் 20 ஓட்டங்கள் குறைவாக எடுத்து விட்டோம் என்றாலும் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

வெற்றிக்கான எல்லா பெருமையும் அவர்களையே சாரும். மற்ற அணிகள் இமாலய ஓட்டங்கள் எடுக்கும் போது, நாங்களும் அதை போன்று விளையாட முன்னேற்றம் காண வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

SHARE