பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சாதனை

363
உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் லீக் போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமது இந்த ஆட்டத்தில் 101 ரன்கள் விளாசினார்.உலகக் கிண்ண போட்டி வரலாற்றில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ஒருவர் சதம் விளாசியமை இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மொயின்கான் 63 ரன்கள் எடுத்ததே உலக கோப்பையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ஒருவரின் சிறந்த ஸ்கோராக இருந்தது.

* 2007-ம் ஆண்டுக்கு பிறகு உலக கிண்ணத்தில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் சர்ப்ராஸ் அகமது பெற்றார்.

* இந்த உலக கோப்பையில் கலந்து கொண்ட 14 அணிகளில் ஆப்கானிஸ்தானை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் இப்போது சதத்தை பதிவு செய்து விட்டன.

* இந்த உலக கோப்பையில் விக்கெட் கீப்பர் அடித்த 7-வது சதம் இதுவாகும். ஒட்டுமொத்த உலக கிண்ண போட்டிகளில் விக்கெட் கீப்பர் மூலம் இதுவரை 15 சதங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் இலங்கை விக்கெட் கீப்பர் சங்கக்கராவின் பங்களிப்பு மட்டும் 5 சதமாகும்.

* அயர்லாந்து அணித்தலைவர் போர்ட்டர்பீல்டு 107 ரன்கள் எடுத்தார். உலக கோப்பையில், டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஒரு அணியின் தலைவர் சதத்தை எட்டுவது இதுவே முதல் தடவையாகும்.

* பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல்-ஹக் காலால் ஸ்டம்பை மிதித்து ‘ட் விக்கெட்’ முறையில் ஆட்டம் இழந்தார். உலக கோப்பை போட்டிகளில் ஒரு வீரர் ‘ட் விக்கெட்’ ஆவது இது 9-வது முறையாகும். இந்த உலக கோப்பையில் இது 2-வது நிகழ்வாகும். ஏற்கனவே ஜிம்பாப்வேயின் சகப்வா, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிராக இவ்வாறு ஆட்டமிழந்தனர்.

SHARE