பான் கீ மூன் உடனான சந்திப்பு வர­லாற்று முக்­கி­யத்­துவமுடையது- தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன்

522

 

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாய­கத்­துக்­கு­மி­டை­யி­லான யாழ். சந்­திப்பு வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக அமை­யலாம். இச்­சந்­திப்பின் மூலம் தமிழர் வாழ்­வி­ய­லிலும் அர­சி­ய­லிலும் முன்­னேற்றம் ஏற்­ப­டலாம் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

samanthan-1

மூன்று நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இன்று யாழ்ப்­பா­ணத்தில் சந்­திக்­க­வுள்ள நிலையில் இச்­சந்­திப்பு தொடர்பில் வின­விய போதே, அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,

ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்­கையில் யுத்தம் நடை­பெற்ற காலத்­திலும் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட காலத்­திலும் இலங்­கையில் நல்­லாட்சி உரு­வாக்­கப்­பட்ட பின்­னரும் இன்­று­வரை பத­வி­யி­லி­ருப்­பவர். இரண்­டா­வது முறை­யாக உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு தனது பத­விக்­கா­லத்தின் கடைக்­கூற்றில் இலங்கை வந்­துள்ளார்.

அவ­ரு­ட­னான எமது சந்­திப்­பா­னது முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தா­கவும் பெறு­ம­தி­மிக்­க­தா­கவும், வர­லாற்று பதிவை உரு­வாக்கும் சந்­திப்­பா­கவும் இருக்­கு­மென்று நம்­பு­கின்றேன்.

ஐ.நா. செய­லாளர் நாய­கத்தை நானும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களும் இன்று வெள்­ளிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் சந்­திக்க இருக்­கின்றோம். இது ஒரு முக்­கி­யத்­துவம் வாய்ந்த சந்­திப்பு, பான் கீ மூன் செய­லாளர் நாய­க­மாக இருந்த காலத்­தில்தான் யுத்தம் முடி­வ­டைந்­தது. யுத்தம் முடி­வுற்ற பி்ன்னர் 2009இல் அவர் இலங்­கைக்கு விஜயம் செய்து யுத்தம் நடை­பெற்ற பிர­தே­சத்­தையும் பார்­வை­யிட்டு அதன்பின் அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் ஒரு பேச்­சு­வார்த்­தையை நடாத்­தி­ய­துடன் ஒன்­றி­ணைந்த கூட்­ட­றிக்­கையும் விடுக்­கப்­பட்­டது. அதன் பின்னர் பல நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றன. அக்­க­ரு­மங்கள் நடை­பெ­று­வ­தற்கு முக்­கி­ய­மான அடிப்­படை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வி­னாலும் செய­லாளர் நாய­கத்­தி­னாலும் விடப்­பட்ட மேற்­படி கூட்டு அறிக்­கை­யாகும். அதைத்­தொ­டர்ந்து அவ­ரு­டைய காலத்தில் இலங்­கையில் நடை­பெற்ற விவ­கா­ரங்கள் தொடர்பில் தனக்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக ஒரு நிபுணர் குழுவை நிய­மித்தார்.

அவரால் நிய­மிக்­கப்­பட்ட நிபுணர் குழு­வா­னது ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டது. மனித உரிமை மீறல் தொடர்­பா­கவும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­டங்கள் மீறல் சம்­பந்­த­மா­கவும் காத்­தி­ர­மான அறிக்­கை­யொன்று அந்த நிபுணர் குழுவால் வெளி­யி­டப்­பட்­டது. அந்த அறிக்­கையின் ஓர் பிரதி இலங்கை அர­சாங்­கத்­துக்கும் மற்றும் ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேர­வைக்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டது.

இவற்றைத் தொடர்ந்­துதான் ஐ.நா மனித உரிமைப் பேர­வையில் 2012 ஆம் ஆண்டு 2013, 2014, 2015 ஆம் ஆண்­டு­களில் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

செய­லாளர் நாயகம் பான் கீ மூன் விரைவில் தனது பத­வி­யி­லி­ருந்து ஓய்­வு­பெற இருக்­கிறார். ஐ.நா. செய­லாளர் நாயகம் என்ற வகையில் இலங்­கைக்­கான விஜயம் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பேசவேண்டிய பல விடயங்களும் அவருடன் நாம் பேசவிருக்கிறோம்.

கேள்வி : அரசியல் தீர்வு, நீதிப் பொறிமுறை சம்பந்தமாக பேசப்படுமா?

பதில் : எல்லா விடயங்களும் பேசப்படும், எங்கள் சந்திப்பு முக்கியத்துவம் உடையதாகவும், வரலாற்று பெறுமதியுடையதாகவும் அமையும் என்றார்.

SHARE