பாரீஸில் தாக்குதல் நடத்தியதற்கு ஆயுதங்கள் வழங்கிய நபர் அதிரடி கைது: வெளியான அதிர்ச்சி தகவல்கள்

314
 

 

பாரீஸில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்த நபர் ஜேர்மன் நாட்டு பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 130 பேர் பரிதாபமாக பலியாயினர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு ஜேர்மன் நாட்டில் இருந்து தான் ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனை தொடர்ந்து, கடந்த திங்கள் கிழமை ஜேர்மனியில் உள்ள Baden-Wurttemberg Magstadt பகுதியில் பொலிசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, Sascha W(34) என்ற நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நவம்பர் 7ம் திகதி அந்த விற்பனையாளரை ஐ.எஸ் தீவிரவாதிகள் இணையத்தளம் மூலமாக தொடர்புக்கொண்டு ஆயுதங்கள் வாங்குவது தொடர்பாக பேரம் பேசியுள்ளனர்.

இரு தரப்பினருக்கும் உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு, சீனாவில் தயாரிக்கப்பட்ட 2 AK-47 ரக துப்பாக்கிகளும், யுகோஸ்லேவியாவில் தயாரிக்கப்பட்ட 2 Zastava M70 ரக துப்பாக்கிகளையும் விற்பனை ஆகியுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள நபரின் கைப்பேசியை பொலிசார் கைப்பற்றி சோதனை செய்தபோது, அவர் தீவிரவாதிகளுடன் ஏற்கனவே தொடர்பில் இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்துள்ள நபர் தற்போது பொலிசாரின் ரகசிய விசாரணையில் இருப்பதாக ஜேர்மன் நாட்டு பத்திரிகைகள் பரபரப்பு தகவல்கள் வெளியிட்டுள்ளன.

SHARE